TNPSC Thervupettagam

எமி கோனே பேரட் – அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதி

November 1 , 2020 1398 days 522 0
  • அமெரிக்க செனட் சபையானது பழமைவாத (கன்சர்வேட்டிவ்) நீதிபதியான எமி கோனே பேரட் என்பவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
  • அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட இவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்ற இருக்கும் புதிய நீதிபதி ஆவார்.
  • இவர் மறைந்த நீதிபதி ரூத் பேடர் ஜின்ஸ்பெர்க் என்பவரால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப உள்ளார்.
  • ஜின்ஸ்பெர்க் என்பவர் முதலாவது யூதப் பெண் நீதிபதி மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய  2வது பெண் நீதிபதி ஆவார்.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேட்டிவ் குழுவினருக்கு 6-3 என்ற அளவில் பெரும்பான்மை வழங்கப் பட்டுள்ளது.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது 9 நீதிபதிகள் உள்ளனர்.
  • அமெரிக்காவில் ஒவ்வொரு நீதிபதியும் வாழ்நாள் முழுவதுமான பதவிக் காலத்தைக் கொண்டிருப்பர். அதாவது அவர்கள் பதவியிலிருந்து விலகல், ஓய்வு பெறுதல், இறப்பு, பதவி நீக்கம் ஆகிய தருணங்களைத் தவிர அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாழ்நாள் முழுவதுமான பணிக் காலத்தைக் கொண்டிருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்