TNPSC Thervupettagam

எம்.பி. பிர்லா விருது - விஞ்ஞானி தானு பத்மநாபன்

October 4 , 2019 1760 days 698 0
  • இயற்பியலாளரும் அண்டவியல் நிபுணருமான தானு பத்மநாபனுக்கு அண்டவியல் உலகிற்கு அவர் செய்தப்  பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க 2019 ஆம் ஆண்டிற்கான எம்.பி பிர்லா நினைவு விருது வழங்கப்பட்டது.
  • இவர் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதையும் அறிவியல் துறையில் பத்மஸ்ரீ  விருதையும் பெற்றுள்ளார் (2007).
  • இவர் கொல்கத்தாவில் உள்ள எம்.பி பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதைப் பெற்றார்.
  • இந்தக் கோளரங்கம் தற்போது தனது 54வது ஆண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1965 ஆம் ஆண்டில் வானியல் விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கியதன் மூலம் இது  வானியல் துறைக்கு முக்கியப் பங்காற்றுகிறது.
இதுபற்றி
  • இந்த விருது 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது விண்வெளி அறிவியல், வானியற்பியல், வானியல் மற்றும் அது தொடர்புடைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் சிறப்பை அங்கீகரிக்கின்றது.
  • இவ்விருது பெற்ற முக்கிய நபர்கள்: டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், பேராசிரியர் ஜே.வி.நார்லிகர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்