TNPSC Thervupettagam

எம்பெரர் பெங்குவின்

August 31 , 2023 456 days 265 0
  • பிரித்தானிய அண்டார்டிக் ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடல் பனி விரைவாக குறைவதனால் எம்பெரர் பெங்குவின் “பாதி அழிந்து விடும்” நிலை என்ற பெரும் ஒரு அச்சுறுத்தலை எதிர் கொள்வதாக தெரிவிக்கப் பட்டது.
  • அவை அண்டார்டிகா சுற்றுச்சூழல் அமைப்பின் உயிரியல் அடையாளச் சின்னமாகும்.
  • எம்பெரர் பென்குவின்களின் வாழ்விடங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அளவில் இனப்பெருக்கம் நடைபெறவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • தற்போதைய புவி வெப்பமடைதல் போக்குகள் மேலும் தொடர்ந்தால், 90% எம்பெரர் பென்குவின்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் “பாதி அழிந்து விடும் ஒரு நிலையை” எட்டும் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது.
  • எம்பெரர் பென்குவின்கள் தங்கள் குட்டிகளை ஈனுவதற்கும், வளர்ப்பதற்கும் நீண்டகால நிலையான கடல் பனிப் பாறையை (“நிலத்துடன் வலுவாக இணைக்கப்பட்ட ஒரு பனிப் பாறை”) முழுமையாக சார்ந்துள்ளன.
  • குறைந்து வரும் கடல் பனியானது, குட்டிகள் இனப்பெருக்கப் பகுதிகளை விட்டு முன் கூட்டியே விலகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதால், அதன் குட்டிகளில் நீர்ப்புகா இறகுகள் உருவாகாமல் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்