பிரித்தானிய அண்டார்டிக் ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடல் பனி விரைவாக குறைவதனால் எம்பெரர் பெங்குவின் “பாதி அழிந்து விடும்” நிலை என்ற பெரும் ஒரு அச்சுறுத்தலை எதிர் கொள்வதாக தெரிவிக்கப் பட்டது.
அவை அண்டார்டிகா சுற்றுச்சூழல் அமைப்பின் உயிரியல் அடையாளச் சின்னமாகும்.
எம்பெரர் பென்குவின்களின் வாழ்விடங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அளவில் இனப்பெருக்கம் நடைபெறவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய புவி வெப்பமடைதல் போக்குகள் மேலும் தொடர்ந்தால், 90% எம்பெரர் பென்குவின்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் “பாதி அழிந்து விடும் ஒரு நிலையை” எட்டும் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது.
எம்பெரர் பென்குவின்கள் தங்கள் குட்டிகளை ஈனுவதற்கும், வளர்ப்பதற்கும் நீண்டகால நிலையான கடல் பனிப் பாறையை (“நிலத்துடன் வலுவாக இணைக்கப்பட்ட ஒரு பனிப் பாறை”) முழுமையாக சார்ந்துள்ளன.
குறைந்து வரும் கடல் பனியானது, குட்டிகள் இனப்பெருக்கப் பகுதிகளை விட்டு முன் கூட்டியே விலகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதால், அதன் குட்டிகளில் நீர்ப்புகா இறகுகள் உருவாகாமல் போகிறது.