மாற்றுக் கட்டுமானப் பொருளாக எம் - சான்ட் எனப்படும் செயற்கை மணலின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் தரமற்ற பொருட்களை ஒழிப்பதற்காகவும் எம்-சான்ட் கொள்கையை முன்வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
எம் - சான்ட் (தயாரிக்கப்பட்ட மணல்) என்பது கான்கீரிட் கட்டுமானத்திற்கு நதி மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மணலாகும்.
இது கடினமான கருங்கற்களை உடைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது.
நன்மைகள்
இது சிமெண்ட்டின் இறுகு நேரம் மற்றும் அதன் பண்புகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு கரிம மற்றும் கரையக்கூடிய சேர்மத்தையும் கொண்டிருக்கவில்லை.
இந்த எம்-சான்ட் மணலை கருங்கல் ஆலைகளுக்கு அருகிலேயேத் தயாரிக்க முடிவதனால் இது குறைந்த போக்குவரத்து செலவு கொண்டது.
மாசுப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் கான்கிரீட்டின் தரம் மற்றும் ஆயுள் அதிகரித்துள்ளது.