புகழ்பெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ் 2024 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க எராஸ்மஸ் பரிசினைப் பெற்றுள்ளார்.
'கற்பனைக்கும் எட்டாதவற்றினைக் கற்பனை செய்தல்' என்ற கருப்பொருளில் அவரது உணர்ச்சி மிக்க எழுத்து சார்ந்தப் பங்களிப்புக்காக அவர் இந்தப் பரிசைப் பெற்று உள்ளார்.
இவர் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைப் பெற்றுள்ளார்.
நெதர்லாந்தின் இளவரசர் பெர்ன்ஹார்ட் 1958 ஆம் ஆண்டில் பிரீமியம் எராஸ்மியனம் என்ற நிறுவனத்தினை நிறுவினார்.