TNPSC Thervupettagam

எரிசக்திப் பயன்பாட்டு முன்னேற்ற அறிக்கை 2023

June 14 , 2023 534 days 303 0
  • 7வது நிலையான மேம்பாட்டு இலக்குக் கண்காணிப்பு : எரிசக்திப் பயன்பாட்டு முன்னேற்ற அறிக்கை 2023 என்ற தலைப்பில் ஒரு புதிய அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA), சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை, ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் பிரிவு, உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், 675 மில்லியன் மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கப் பெற வில்லை.
  • எரிசக்திக்கான அணுகல் இல்லாமல் உள்ள உலகளாவிய மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நிலையில் 567 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் வாழ்கின்றனர்.
  • இதற்கிடையில், பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் ஆசியாவில் வாழ்கின்ற 2.3 பில்லியன் மக்கள் சுத்தமான சமையல் முறைக்கான ஒரு அணுகலைப் பெறவில்லை.
  • தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், 2030 ஆம் ஆண்டில் 660 மில்லியன் மக்கள் மின்சாரம் கிடைக்கப் பெறாமல் இருப்பார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 1.9 பில்லியன் மக்கள் தொடர்ந்து மாசுபடுத்தக் கூடிய சமையல் எரிபொருளையேச் சார்ந்திருப்பர்.
  • மொத்த இறுதிக் கட்ட எரிசக்தி நுகர்வில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 19.1% என்ற அளவில் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்