TNPSC Thervupettagam

எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் – சென்னை

October 15 , 2017 2658 days 985 0
  • உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் (Combustion Research Centre) சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உலகில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம்
  • இந்த மையத்தில் உந்தூர்தி , வெப்ப ஆற்றல் , விண்வெளி உந்துதல் அமைப்பு போன்றவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். மேலும் புவிஈர்ப்பு விசை இல்லா விண்வெளியில் எரிபொருள் எரிவது குறித்த ‘Microgravity Combustion’ எனும் மிகக்குறைந்த ஈர்ப்பு விசை எரியூட்டல் குறித்தும் ஆராய்ச்சிகள் சிறிய அளவில் இங்கு நடத்தப்படும்.
  • இந்த மையம் இந்திய விஞ்ஞான சமுதாயத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும். மேலும் மாற்று எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்கும் பெரும்பங்காற்றும்.
  • இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Department of Science and Technology- DST) கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தால் இந்த மையம் ஆதரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்