எரிபொருள் பயன்பாட்டிற்காக பெட்ரோலிய கரி (Petroleum Coke – Pet Coke) இறக்குமதி
August 19 , 2018 2291 days 811 0
வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அயல்நாட்டு வர்த்தகத்திற்கான இயக்குனர் அலுவலகம் எரிபொருளாக பயன்படும் பெட்ரோலிய கரியை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
ஆனால் இவ்வலுவலகம் சிமெண்ட், சுண்ணாம்பு சூளை, கால்சியம் கார்பைட் மற்றும் வளிமயமாக்கல் போன்ற சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் மட்டும் அந்த கரியை மூலப்பொருளாக பயன்படுத்த இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கின்றது.
முன்பு புதுதில்லியைச் சுற்றி ஏற்படும் மாசுவை தடுப்பதற்காக உச்சநீதிமன்றம் (அக்டோபர் 2017) இந்த கரியின் பயன்பாட்டை தடை செய்ததையடுத்து ஏற்பட்ட பெட் கோக் (Pet Coke) தொடர்பான கொள்கை குளறுபடிகளால் இந்த குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன.
இரண்டு வகையான பெட் கோக் கரிகள் தயாரிக்கப்படுகின்றன.
எரிபொருள் தரம் கொண்ட பெட் கோக் (80%)
எண்ணெய் சுத்திகரிப்பின் போதான நெருப்பிலிட்டு சாம்பலாக்கப்படும் பெட் கோக் (20%)
பெட் கோக் சாதாரண கரியை விட அதிக மாசுபடுத்தி ஆகும். மேலும் இது சுற்றுப்புறத்திற்கும் சுகாதாரத்திற்கும் அதிக கேட்டை விளைவிக்கின்றது.
இது மில்லியனுக்கு 74000 துகள்கள் என்ற அளவில் அபாரமான அளவிற்கு கந்தக துகள்களை கொண்டு வாகன மாசுக்களைக் காட்டிலும் அதிக அளவிற்கு ஆகாய வளிமண்டலத்தில் மாசுக்களை வெளியிடுகின்றது.