எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்திரா தீவுகளுக்கிடையே சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது.
இது கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் விடுமுறையில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
அனக் கிராக்காட்சு எரிமலைத் தீவின் ஒரு பகுதி கடலுக்குள் விழுந்ததால் கடலுக்கடியில் நிலச்சரிவு ஏற்பட்டதன் மூலம் இந்த சுனாமி இந்தோனேஷியாவைத் தாக்கியது.
இந்த சுனாமியானது நிலநடுக்கத்தின் மூலம் ஏற்படாமல் எரிமலை வெடிப்பால் ஏற்பட்டுள்ளது. எனவே தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவலைத் தர முடியவில்லை.