TNPSC Thervupettagam

எரிமலை வெடிப்பிற்குக் காரணமாகும் கார்பன் டை ஆக்சைடு

August 19 , 2023 336 days 215 0
  • ஒரு புதிய ஆய்வானது, எரிமலைகள் வெடிப்பதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய புரிதலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பாறைக் குழம்பு (பாசால்டிக்) எரிமலைகள் வெடிப்பதைத் தூண்டும் காரணிகள் நீராவி அல்ல, அது கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
  • உலகிலேயே அதிகளவுச் செயலில் உள்ள கடல்தீவு எரிமலைகளில் ஒன்றான பிகோ டோ ஃபோகோ எரிமலையின் எரிமலைக் குழம்பினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
  • கண்ட மேலோட்டிற்குக் கீழே 12 முதல் 19 மைல் ஆழத்தில் உருவாகும் அதிகபட்ச அளவிலான கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பினை அவர்கள் கண்டறிந்தனர்.
  • மூடகத்தில் இரும்பு மற்றும் இரும்பு ஆக்சைடுகள் அதிக அளவில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தப் பகுதியானது புவிக்கு கீழே மற்றும் மூடகத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்