இந்திய எரிசக்திப் பரிவர்த்தனையானது இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்து வழங்குவதற்காக நாடு தழுவிய முதல் இணைய விநியோக அடிப்படையிலான எரிவாயு வர்த்தகத் தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது இந்திய எரிசக்திப் பரிமாற்றத்தின் துணை நிறுவனமாகச் செயல்படும்.
இது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மின்னணு அமைப்பாகும்.
இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
கெயில் மற்றும் பெட்ரோனெட் போன்ற திரவ இயற்கை எரிவாயு நிறுவனங்கள் இதனோடு சேர்ந்துள்ளன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடியாக பசுமை இல்ல வாயுக்களின் மிகப்பெரிய உமிழ்ப்பாளராக இருக்கும் இந்தியா, பசுமை எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் உமிழ்வைக் கட்டுப்படுத்திக் குறைப்பதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.