TNPSC Thervupettagam

எறும்புத் திண்ணியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல்

February 12 , 2020 1621 days 675 0
  • கொரோனா வைரஸின் பாதிப்பிற்கு எறும்புத் திண்ணி காரணம் என்று சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இவர்களைப் பொறுத்த வரை, சீனாவில் சுமார் 636 மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் பாதிப்பானது வுஹான் நகரில் உள்ள ஒரு சந்தையிலிருந்த எறும்புத் திண்ணிகள் மூலமாக ஏற்பட்டது.
  • எறும்புத் திண்ணியிலிருந்து பிரிக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபணுத் தொகுப்பானது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் தொகுப்புகளை 99% ஒத்திருக்கின்றது.

எறும்புத் திண்ணி

  • சீனாவில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் எறும்புத் திண்ணி பயன்படுத்தப் படுகின்றது.
  • புவியில் வாழும் செதில்களைக் கொண்ட ஒரே பாலூட்டி இதுவாகும்.
  • ஆசியாவில் அதிக அளவில் கடத்தப்பட்ட பாலூட்டி இனம் இதுவாகும்.
  • இந்த வைரஸானது எறும்புத் திண்ணி வர்த்தகத்தின் மூலம் சீனாவிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது.
  • சீன எறும்புத் திண்ணியானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் (International Union for Conservation of Nature - IUCN) “மிகவும் அச்சுறு நிலையில் உள்ள இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.
  • IUCNன் சிவப்புப் பட்டியலில் இந்திய எறும்புத் திண்ணியானது (மனிஸ் கிராசிகுடாட்டா) “அருகி வரும் இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்