உலகிலேயே முதல் முறையாக, காந்தப்புலங்களைப் பயன்படுத்தி எலிகளின் சில குறிப்பிட்ட மூளைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு திறனை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பானது, Nano-MIND (நரம்பிய இயக்கவியலின் காந்தவிய மரபியல் சார் குறுக்கீடு - Magnetogenetic Interface for NeuroDynamics) தொழில்நுட்பம் என அழைக்கப் படுகிறது.
Nano-MIND தொழில்நுட்பமானது காந்தத் தன்மையினைப் பயன்படுத்தி குறிப்பிட்ட உள்ளார்ந்த மூளை நரம்பியல் சுற்றுகளின் கம்பிவட இணைப்பற்ற, தொலைதூர கட்டுப்பாட்டுத் திறன் கொண்ட மற்றும் துல்லியமான பண்பேற்றத்தை மேற்கொள்ள வழி வகுக்கிறது.
இது அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் உந்துதல் போன்ற பல்வேறு சிக்கலான மூளை செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் கையாளுவதற்கும் வேண்டி சில புதிய சாத்தியக் கூறுகளை வழங்குகிறது.