TNPSC Thervupettagam

எல்நினோ மோடோக்கி

May 19 , 2019 1889 days 922 0
  • இந்திய வெப்ப மண்டல வானிலையியல் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஏற்படவிருக்கும் எல்நினோ மோடோக்கி பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது.
    • வெப்ப அலைகளின் நிகழ்வுகளை அதிக அளவில் ஏற்படுத்தும்
    • வெப்ப அலைகளின் (அனல் காற்று) காலங்களை அதிகப்படுத்தும்.
  • தென் இந்தியா மற்றும் கடலோரப் பகுதிகள் ஆகியவை அதிக அளவு வெப்ப அலையினால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றன.
  • இந்தியாவில் வெப்ப அலைகளானது பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் ஏற்பட்ட பின்பு நிகழ்கின்றது.
  • எல் நினோ என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடல் வெப்பமடைதல் ஆகும்.
  • ஆனால் எல் நினோ மோடோக்கி என்பது மத்திய பசிபிக் பெருங்கடல் வெப்பமடைதல் ஆகும்.
  • எல் நினோ மோடோக்கி நிகழ்வுகளுடன் இந்தியாவில் எதிர்காலத்தில் நிகழும் வெப்ப அலைகளுடன் தொடர்புடைய ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • வெப்ப அலைகள் மிக அதிக அளவில் நிகழ்வதற்குப் பின்வரும் கூடுதல் காரணிகள் காரணங்களாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
    • மண்ணின் ஈரப்பதம் குறைதல்
    • பூமியிலிருந்து வளிமண்டலத்திற்கு வெப்பம் கடத்தப்படுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்