TNPSC Thervupettagam

எல்பிஸ்டோஸ்டேஜ் என்பதின் புதைபடிவம் - ஆராய்ச்சி

March 24 , 2020 1581 days 511 0
  • கனடாவைச் சேர்ந்த தொல்லுயிரியல் வல்லுநர்கள் மனிதனின் கைகளை மீனின் துடுப்புகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் “எல்பிஸ்டோஸ்டேஜ்” என்பதின் புதை படிவத்தை ஆய்வு செய்தனர்.
  • “எல்பிஸ்டோஸ்டேஜ்” ஆனது மீனிலிருந்து நிலவாழ் முதுகெலும்புள்ளவையாக மாற்றமடைந்ததின் முக்கியமான நிலையைக் குறிக்கின்றது.
  • “எல்பிஸ்டோஸ்டேஜ்” ஆனது முற்றிலும் நீர் சார்ந்தவையாக இருந்தது.
  • இது முதலை போன்ற உடலமைப்பு, தட்டையான முக்கோண வடிவத் தலை, தாடையைச் சுற்றிலும் பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
  • இந்த “எல்பிஸ்டோஸ்டேஜ்“லிருந்து தோன்றிய 4 கால்கள் கொண்ட விலங்குகள் “டெட்ராபோடுகள்” என்று அழைக்கப் படுகின்றன.
  • இந்த “எல்பிஸ்டோஸ்டேஜ்” உயிரினங்கள் மீன் ஊழிக் கால கட்டத்தில் வாழ்ந்துள்ளன.
  • மீன் ஊழிக் காலமானது 60 மில்லியன் ஆண்டுகளைக் கொண்டதாகவும் ஏறத்தாழ 419 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் உள்ளது.
  • பாறைக் கற்கள் காலகட்டம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடமான இங்கிலாந்தில் உள்ள டேவோன் என்ற இடத்தின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்