TNPSC Thervupettagam

எல்லி வெய்ஸல் விருது

March 11 , 2018 2450 days 779 0
  • 2012 ஆம் ஆண்டு மியான்மரின் ஆங் சாங் சூகிக்குத் தான் வழங்கிய எல்லி வெய்ஸல்  (Elie Wiesel Award) எனும் உயரிய விருதினை ரத்து செய்துள்ளதாக   அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகம் (Holocaust Memorial Museum) அறிவித்துள்ளது.
  • நோபல் பரிசுபெற்ற மியான்மரின் தேசிய ஆலோசகரான ஆங்சான் சூகிக்கு வழங்கப்பட்ட இவ்விருது திரும்பப் பெறப்படுதலுக்கு மியான்மரில் ரோஹிங்கியா சமூகத்தினருக்கு எதிராக மியான்மர் இராணுவத்தார் நடத்திய இனப்படுகொலையை எதிர்த்து ஏதும் எதிர்வினை ஆற்றாமல் மவுனம் காத்தமையே காரணம் என இந்த அருங்காட்சியம் கூறியுள்ளது.
  • சிறுபான்மையினச் சமூகமான  ரோஹிங்கியர்களுக்கு எதிராக மியான்மர்   இராணுவம் நிகழ்த்திய அராஜகத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மியான்மரிலிருந்து 7,00,000 ரோஹிங்கியர்கள் இதுவரை  நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்