TNPSC Thervupettagam

எல்லைப் பாதுகாப்பு படை நிறுவன தினம்

December 2 , 2017 2548 days 1449 0
  • எல்லைப் பாதுகாப்பு படை நிறுவன தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • எல்லை பாதுகாப்பு படையானது (Border Security Force) ஒரு துணை இராணுவப் படையாகும். (பாரா மிலிட்டரி).
  • இந்தியாவின் நில எல்லைகளை காத்தல் மற்றும் எல்லைத் தாண்டிய குற்றங்களைத் தடுத்தல் இதன் முக்கியப் பொறுப்பாகும்.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படுகிறது.
  • BSF உலகின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையாகும்.
  • மிகப்பெரும் படை அளவும், செயல்பாட்டையும் கொண்டிருப்பதன் காரணமாக, தனக்கென தனி வான், கடல் மற்றும் பீரங்கிப் படைப்பிரிவை கொண்ட ஒரே மத்திய ஆயுதக் காவற்படை (Central Armed Police Force -CAPF), எல்லைப் பாதுகாப்பு படை  ஆகும்.
  • இது ஐந்து மத்திய ஆயுதக் காவற் படைகளுள் ஒன்றாகும்.
  • இதன் தற்போதைய தலைவர் இயக்குநர் ஜெனரல் கே.கே. ஷர்மா ஆவார்.
  • மேற்கே பாகிஸ்தான் தொடங்கி கிழக்கே வங்கதேசம் வரை 6000 கி.மீ எல்லையை 656 எல்லைச் சாவடிகளைக் கொண்டு எல்லைப் பாதுகாப்பு படை ஆனது இந்திய எல்லைகளைக் காக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்