TNPSC Thervupettagam

எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தங்கள்

July 22 , 2022 730 days 391 0
  • அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கந்து ஆகியோர் எல்லைப் பிரச்னை தொடர்பான மூன்றாவதுச் சந்திப்பினை மேற்கொண்டனர்.
  • அவர்கள் கூட்டாக இணைந்து ‘நம்சாய் பிரகடனத்தினை’ வெளியிட்டனர்.
  • இந்த இரண்டு முதல்வர்கள் இடையே, இந்த ஆண்டு ஜனவரி 24 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் முதல் இரண்டு சந்திப்புகள் நடைபெற்றன.
  • 1960 ஆம் ஆண்டின் போது, உயர் அதிகாரம் கொண்ட ஒரு முத்தரப்புக் குழுவால் தயாரிக்கப் பட்ட 29 விதிமுறைகளின் பேரில் எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டு கையொப்பமிடப் பட்டு, அங்கீகரிக்கப்பட்ட எல்லையாக இது அறிவிக்கப்பட்டது.
  • இந்த இரு மாநிலங்களும் 12 "பிராந்தியக் குழுக்களை" அமைக்க முடிவு செய்தன.
  • இது ஒவ்வொன்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் 12 மாவட்டங்களையும், அதற்கு இணையான அசாமின் மாவட்டங்களையும் உள்ளடக்கிய 123 கிராமங்களின் மீது கூட்டுச் சரிபார்ப்பினை மேற்கொள்ளும்.
  • பிராந்தியக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு இறுதி முடிவு எடுக்கப் படும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் அரசியலமைப்பு எல்லைக்குள் இருக்கும் 28 கிராமங்கள் இதனுடன் இருக்கும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தினால் உரிமைக் கோரல்கள் திரும்பப் பெறப்பட்ட 3 கிராமங்கள் அசாமுடன் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்