TNPSC Thervupettagam

எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை

July 26 , 2023 360 days 234 0
  • மே 04 ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ஊரான மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில் (ஜீரோ FIR) எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
  • ஒரு காவல் நிலையமானது, மற்றொரு காவல் நிலையத்தின் அதிகார வரம்பில் நடந்த குற்றத்திற்கான புகாரைப் பெற்றால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, மேற்பட்ட விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அந்த வழக்கினை மாற்றுகிறது.
  • இது எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை எனப்படுவதோடு, இதற்கு வழக்கமான முதல் தகவல் அறிக்கை எண் கொடுக்கப்படாது.
  • எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை கிடைத்தப் பிறகு, அந்த சம்பவம் நடந்த எல்லை வரம்பிற்குட்பட்ட காவல் நிலையமானது இந்தப் புதிய முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும்.
  • நீதிபதி வர்மா குழுவின் அறிக்கையின் பரிந்துரையை அடுத்து, எல்லை வரம்பிற்கு உட்படாத முதல் தகவல் அறிக்கை தொடர்பான விதி அறிமுகப் படுத்தப் பட்டது.
  • முதல் தகவல் அறிக்கை என்ற சொல்லானது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 அல்லது வேறு எந்தவொருச் சட்டத்திலும் வரையறுக்கப் பட வில்லை.
  • காவல்துறை விதிமுறைகள் அல்லது விதிகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் தகவல் முதல் தகவல் அறிக்கை (FIR) என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்