TNPSC Thervupettagam

எளிதான ஏற்றுமதிக்கான டிஜிட்டல் தொடக்கங்கள்

April 7 , 2018 2297 days 671 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது (Ministry of Commerce and Industry) ஏற்றுமதியின் எளிமையாக்கலுக்காக (Ease Of Export) ஏற்றுமதி ஆய்வுக்  குழுவின் டிஜிட்டல் தொடக்கங்களை துவங்கியுள்ளது.
  • வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஏற்றுமதி ஆற்றலை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா தொடக்கத்தின் (Digital India Initiative) கீழ் இந்த டிஜிட்டல் தொடக்கங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • டிஜிட்டல் தொடக்கங்களாவன
    • ஏற்றுமதி எச்சரிக்கை கண்காணிப்பு இணைய வாயில்
    • ஆய்வக மதிப்பீட்டு இணைய வாயில்
  • ஏற்றுமதி எச்சரிக்கை கண்காணிப்பு இணைய வாயிலானது (Export Alert Monitoring portal) இறக்குமதி செய்யும்  நாடுகளால் எழுப்பப்படுகின்ற இணக்கமின்மையை (Non-compliances) கண்காணிக்கும்.
  • ஆய்வக மதிப்பீட்டு இணைய வாயிலானது (Lab-one assessment portal) மதிப்பீட்டு அமைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற அனைத்து ஏற்றுமதி-சார்     பங்கெடுப்பாளர்களுக்கும்  அவர்களை பொதுவான ஒற்றை மேடையின் மீது திரட்டுவதன் மூலம் அவர்களுக்கு   ஏற்றுமதி தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட   அணுகுமுறையை (unified approach)  வழங்கும்.

ஏற்றுமதி ஆய்வுக் குழு

  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஏற்றுமதி சான்றளிப்பு அமைப்பே (export certification body) ஏற்றுமதி ஆய்வுக் குழுவாகும். வெளிப்படையான முறையில் ஏற்றுமதி பரிமாற்ற நேரம் மற்றும் செலவைக் குறைக்க ஏற்றுமதி ஆய்வுக்குழு   3 இணைய வாயிலை மேம்படுத்தியுள்ளது.
  • 1963 ஆம் ஆண்டின் ஏற்றுமதி (தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வு) (Export (Quality Control and Inspection) Act) சட்டத்தினுடையப் பிரிவு 3ன் கீழ் மத்திய அரசு ஏற்றுமதி ஆய்வுக் குழுவைத் தோற்றுவித்தது.
  • ஏற்றுமதி ஆய்வுக்குழு மத்திய அரசிற்கான ஓர் ஆலோசனை அமைப்பாகும் (advisory body) .
  • சென்னை, டெல்லி, கொச்சி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் மத்திய வர்த்தக அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 ஏற்றுமதி ஆய்வு நிறுவனங்களின் (Export Inspection Agencies-EIAs) மீது தொழிற்நுட்ப மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுமதி ஆய்வுக்குழு மேற்கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்