TNPSC Thervupettagam
August 30 , 2024 46 days 102 0
  • அறிவியலாளர்கள் தற்போது CRISPR எனப்படும் மரபணு மாற்ற முறையினைப் பயன்படுத்தி, விரும்பத்தக்க மரபணு பண்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் அல்லது விரும்பத்தகாத பண்புகளை அகற்றுவதற்காக மரபணுக்களைத் துல்லியமாக திருத்தி அமைக்க முடியும்.
  • இருப்பினும், பொதுவாகப் பயன்படுத்தப் படும் CRISPR முறையின் வடிவமானது தாவர மரபணுக்களுக்கு பொருந்தாதது எனபது இதில் ஒரு முக்கியமான தடையாக உள்ளது.
  • இந்த அமைப்பானது டிஎன்ஏவின் மிகவும் சில குறிப்பிட்டப் பகுதிகளை இலக்காக நிர்ணயிப்பதற்காக Cas9 அல்லது Cas12 என்ற இரண்டு புரதங்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறது.
  • ஆனால் அவை தாவர செல்களுக்கு இடமளிக்க முடியாத அளவிற்குப் பெரிதானவை.
  • தாவர மரபணு மாற்றச் செயல்முறையில் உள்ள இந்தப் பெரிய சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒரு மாற்றீட்டை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் முன் வைத்தனர்.
  • அவர்கள் டெய்னோகாக்கஸ் ரேடியோடூரன்ஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட ISDra2TnpB என்ற ஒரு புரதத்தைக் கொண்ட தாவர மரபணு மாற்றக் கருவியினை உருவாக்கினர்.
  • ISDra2TnpB ஆனது Cas9 மற்றும் Cas12 ஆகிய புரதங்களின் அளவின் பாதி அளவை விட குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்