இந்த முக்கியத் தீர்ப்பில், நிதி விநியோகம் மீதான உரிமை கோரல் தொடர்பாக திவாலான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கிய வங்கிகள் அடங்கிய “கடன் வழங்குநர்கள் குழுவின்” முன்னுரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றமானது, நிறுவனம் இயங்குவதற்கான மூலப்பொருள்களையும் சேவையையும் அளித்தவர்களைக் காட்டிலும் நிறுவனத்துக்குக் கடனாக நிதி வழங்கியவர்களுக்குத் தான் அதிக முன்னுரிமை தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நிறுவனத்தின் நொடிப்பு நிலை நடவடிக்கைகளின் போதும், கடனில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்தும் போதும் இந்த கடனை அளிப்பவர்கள் குழு இரண்டையும் ‘வித்தியாசமாக’ தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பின்னணி
தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அகமதாபாத் அமர்வானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆர்சிலர் மிட்டல் என்ற உலகளாவிய எஃகு நிறுவனமானது எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க அனுமதி அளித்தது.
ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிதிச் சலுகைகளானது அந்த நிறுவனம் இயங்குவதற்கான மூலப்பொருள்களையும் மற்ற பிற சேவைகளையும் அளித்தவர்களை உள்ளடக்க வில்லை.