ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் (ஒரே பாரதம்-சிறந்த பாரதம்) திட்டத்தின் கீழ் தங்களிடையேயான கலாச்சார உறவை வலுப்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச அரசானது நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மத்தியப் பிரதேசமானது மணிப்பூரில் நடைபெற இருக்கும் சங்கை (Sangai) மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது. அதேபோல் தங்களுடைய கலாச்சார வழக்கங்களை காண்பிப்பதற்காக மணிப்பூர் மற்றும் நாகலாந்தை சேர்ந்த அணிகள் மத்திய பிரதேசத்தின் லோக் ரங் மற்றும் பால் ரங் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் திட்டமானது சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் தினத்தின் போது ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமரால் துவங்கப்பட்டது.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்களிடையேயான பரஸ்பர தொடர்பை ஊக்கப்படுத்துதல், மற்றும் நாட்டின் பல்வேறு பிரிவினரிடையேயான கலாச்சார உறவை வலுப்படுத்துதலே இந்த ஒரே பாரதம்-சிறந்த பாரதத் திட்டத்திற்கான நோக்கமாகும்.