TNPSC Thervupettagam

ஏஞ்சலா மெர்கல் – 4வது முறையாக ஜெர்மனியின் அதிபர்

September 25 , 2017 2471 days 817 0
  • ஜெர்மனியின் தேர்தலில் அதன் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கல் 4-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
  • மெர்கல்லின் கன்சர்வேடிவ் கட்சி 33.2% ஓட்டுகளுடன் பாராளுமன்றத்தின் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
  • குடியேறுபவர்களுக்கு எதிரான கொள்கையுடைய கட்சியான ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மனி (Alternative for Germany – AFD) 13.1% ஓட்டுக்கள் பெற்றுள்ளது.
  • இதன் மூலம் 50 ஆண்டுகால ஜெர்மனியின் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு வலதுசாரி தத்துவார்த்த கட்சி முதன்முறையாக பாராளுமன்றத்தில் இடம்பிடித்துள்ளது.
ஜெர்மனியின் தேர்தல் முறை
  • ஜெர்மனியின் அரசியல் சட்டம், ஜெர்மானிய பாராளுமன்றமான பண்டேஸ்டாகிற்கு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என நிர்ணயித்துள்ளது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும்.
  • ஜெர்மனியர் பாராளுமன்ற உறுப்பினர்களை இரண்டு ஓட்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் ஒரு ஓட்டு நேரடி வேட்பாளருக்கு கிடைக்கும். அந்த நேரடி வேட்பாளர் தனது தேர்தல் மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும்.
  • மிக முக்கியமானதாக கருதப்படும் இரண்டாவது ஓட்டு ஒவ்வொரு மாகாணத்திலும் சம்பந்தப்பட்ட கட்சியின் பொதுக்குழு  அளித்துள்ள கட்சிப்பட்டியலுக்கு இடப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்