TNPSC Thervupettagam

ஏஞ்சல் வரி விதிகளில் மாற்றம்

October 26 , 2023 267 days 195 0
  • பட்டியலிடப்படாத புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கிய பங்குகளை மதிப்பிடுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய புதிய ஏஞ்சல் வரி (புத்தொழில் நிறுவனங்களின் மிகை மதிப்பு மீதான வரி) விதிகளை வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
  • கட்டாயமாக மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகளை (CCPS) குறிக்கும் கூடுதல் துணைப் பிரிவை இந்த அறிவிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு பட்டியலிடப்படாத நிறுவனம் ஆனது அதன் நியாயமான சந்தை மதிப்பை (FMV) விட அதிக விலையில் முதலீட்டாளருக்கு பங்குகளை வழங்கும்போது ஏஞ்சல் வரி (30.6 சதவீதம்) விதிக்கப்படுகிறது.
  • முன்னதாக, இது ஒரு உள்நாட்டு முதலீட்டாளரால் செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டுமே விதிக்கப் பட்டது.
  • ஆனால் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் மீதும் ஏஞ்சல் வரியை விதிப்பதற்கு விரிவுபடுத்த முன்மொழியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்