ஏப்ரல் மாதத்தில், மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பண வீக்க விகிதம், 2011-12 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 15.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு விகிதம் 14.55 சதவீதமாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் உற்பத்திப் பொருட்களுக்கான பணவீக்கம் 10.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு இரசாயனங்கள், அடிப்படையான உலோகங்கள், இரசாயனப் பொருட்கள், இயந்திரங்கள், ஜவுளிகள், மின்சார மற்றும் இதர உபகரணங்கள் காரணமாகும்.
டீசல், பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் LPG போன்ற முக்கிய பிரிவுகளில் நிலவிய அதிகப் பணவீக்கம் காரணமாக எரிபொருள் பணவீக்க விகிதம் 38.66 சதவீதமாக இருந்தது.
எரிபொருள் அல்லாத மற்றும் உணவு அல்லாத கூறுகளுக்கான அசல் மொத்த விற்பனை விலைக் குறியீட்டுப் பணவீக்கமானது நான்கு மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்சமாக 11.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.