TNPSC Thervupettagam

ஏரியல் துணைக்கோளில் நிலத்தடிப் பெருங்கடல்

August 28 , 2024 87 days 122 0
  • யுரேனஸின் துணைக் கோள்களில் ஒன்றான ஏரியலில் கார்பன் டை ஆக்சைடு பனிக் கட்டி (உலர்பனி) இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது துணைக்கோளின் பனி நிறைந்த கண்ட மேலோட்டிற்கு அடியில் திரவ கடல் இருப்பதைக் குறிக்கிறது.
  • நிலத்தடி கடல் ஆனது, இரசாயன எதிர்வினைகளுக்கு உட்பட்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் நிலைமையில் அது பனிப் பிளவுகள் மூலம் மேற்பரப்பில் வெளியேறுகிறது.
  • அதற்கு மாற்றாக, யுரேனஸின் காந்தப்புலம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு பனியை உருவாக்குதற்காக என்று மூலக்கூறுகளை உடைக்கக் கூடும் என்று பரிந்துரைக்கப் படுகிறது.
  • கார்பன் டை ஆக்சைடு தவிர, ஏரியலில் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பனேட்டுகள் காணப்படுவதற்கான பல்வேறு தடயங்களையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த தாதுக்கள் பொதுவாக, நீர் ஆனது பாறைகளுடன் தொடர்பு கொள்ளும்போது உருவாகின்றன.
  • நமது சூரிய குடும்பத்தில் மூன்றாவது பெரிய கோளான யுரேனஸைச் சுற்றி வரும் 27 துணைக் கோள்களில் ஏரியலும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்