TNPSC Thervupettagam

ஏரி தூய்மைப்படுத்துதலுக்கான புதிய வேதியியல் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்

September 22 , 2017 2672 days 1955 0
  • "CV தொழில்நுட்பம்" எனும் வேதியியல் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைதராபாத்திலுள்ள உசைன்சாகர் ஏரியை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.
  • இதன்வழி சுத்திகரிக்கப்பட்ட நீர் உலக சுகாதார நிறுவன மற்றும் இந்திய தரச்சான்று நிலைகளை அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வேதியியல் சுத்திகரிப்பு முறை உயிரியல் சுத்திகரிப்பு முறையை பயன்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விட (Sewage treatment plant) வேகமாக சுத்திகரிக்க வல்லன.
  • இந்த சுத்திகரிக்கப்பட்டுள்ள நீரில் BOD எனப்படும். உயிரியல் ஆக்ஸிஜன் தேவை அளவு குறைந்திருப்பதும், தண்ணீர் தரத்திற்கான 12 அளவுருக்கள் (Parameter) மேம்பட்டிருப்பதும், மொத்த திட கரைபொருள் (TDS) அளவு அதிகரித்திருப்பதும், உலோக அயனிகளின் அளவு கணிசமாக குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
BOD – உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (Biological Oxygen demand)
  • நுண்ணுயிரிகள் நீரிலுள்ள கரிமப் பொருட்களை மக்கச்செய்ய கட்டாயமாக தேவைப்படும் கரைந்த ஆக்ஸிஜன் அளவே (Dissolved Oxygen) BOD எனப்படும்.
  • இவை நீரின் தரத்தை அல்லது நீரின் மாசுபாட்டு அளவை கண்டறிய பயன்படும்.
  • குறைந்தபட்ச BOD அளவானது ஆக்ஸிஜன் சார்ந்த உயிர்களுக்கு நீரானது உயிர்வாழ பொருந்தக்கூடிய நிலையில் உள்ளது என்பதை குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்