புது தில்லியில் Airsewa 2.0 என்பதின் மேம்படுத்தப்பட்ட இணைய தளம் மற்றும் அலைபேசி செயலி தொடங்கப்பட்டது.
Airsewa 2.0 ஆனது விமானங்களின் தாமதம், பணம் திருப்பி செலுத்துதலில் உள்ள பிரச்சனை, நீண்ட வரிசை மற்றும் பயண உடைமைகள் காணாமல் போவது குறித்த புகார்கள் போன்ற விமானப் பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காணும்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது ஏர்சேவா இணைய தளம் மற்றும் செயலியை தொடங்கியது.
ஒரு ஆண்டில் பெறப்பட்ட புகார்களுக்கு குறித்த காலத்திற்குள் 100 சதவீத தீர்வுகளை எட்டியதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சுரேஷ் பிரபு மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் சாம்பியன் விருது அளித்தனர்.