ஏர்டெல் நிறுவனத்தின் 2Africa pearls கடலடிக் கம்பிவட இணைப்பு
April 14 , 2025 5 days 77 0
பாரதி ஏர்டெல் நிறுவனமானது, 2Africa pearls என்ற கடலடிக் கம்பிவட இணைப்பு அமைப்பை இந்தியாவில் நிறுவ உள்ளது.
இது நாட்டின் தகவல் தொடர்பு வலையமைப்பை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுடன் இணைக்கிறது.
2Africa pearls கம்பிவட அமைப்பானது இந்தியாவிற்கு 100 tbps (வினாடிக்கு எத்தனை டெராபிட்கள் என்ற அளவு) என்ற சர்வதேச இணைய இணைப்புத் திறனை வழங்கும்.
கடலடிக் கம்பிவட இணைப்புகள் ஆனது, அகலப்பட்டை இணையச் சேவைகளுக்காக உலக நாடுகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு ஆகும்.
உலகம் முழுவதும் சுமார் 650 கடலடிக் கம்பி வட இணைய அமைப்புகள் உள்ளன அவற்றில் 570 செயல்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனமானது, இந்தியாவில் 2Africa pearls கம்பிவடங்களை நிறுவுவதற்கான பங்குதார நிறுவனமாகும்.
2Africa கம்பிவட அமைப்பின் ஒரு பகுதியான 2Africa pearls ஆனது, நிறைவடையும் போது உலகின் மிக நீளமான கடலடி கம்பிவட அமைப்பாக இருக்கும்.
இது ஆசியாவை மத்தியக் கிழக்கு நாடுகள் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றுடன் இணைக்கும் 45,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ஒரு பரப்பளவைக் கொண்டுள்ளது.