TNPSC Thervupettagam

ஏற்பு இடைவெளி அறிக்கை 2024

November 10 , 2024 12 days 80 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) ‘Adaptation Gap Report 2024: Come hell and high water’ என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வளர்ந்து வரும் நாடுகளுக்கான சர்வதேசப் பொது ஏற்பு நிதி வழங்கல் ஆனது 2022 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
  • இருப்பினும், கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்த இலக்கை அடைவது என்பது ஏற்பு நிதி இடைவெளியை மட்டுமே குறைக்கும் என்ற நிலையில் இது ஆண்டிற்கு சுமார் 187-359 பில்லியன் டாலர் (சுமார் 5 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டு வரை வளர்ந்து வரும் நாடுகளுக்கான உண்மையான ஏற்பு நிதித் தேவைகள் ஆண்டிற்கு 387 பில்லியன் டாலர் ஆகும்.
  • இந்தத் திட்டமிடலில் சுமார் 171 நாடுகளானது பாரீஸ் உடன்படிக்கையினை அடையச் செய்வதற்கான கொள்கை அல்லது உத்திசார் ஆவணம் போன்ற குறைந்தபட்சம் ஒரு தேசிய ஏற்புத் திட்டமிடல் செயற்கருவியினைக் கொண்டுள்ளன.
  • அத்தகைய செயற்கருவி இல்லாத 26 நாடுகளில், 10 நாடுகள் ஆனது அத்தகைய செயல் திட்டங்களை உருவாக்குவதற்கான விருப்பத்தினைக் கூட வெளிப்படுத்தவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்