TNPSC Thervupettagam

ஏற்றல் இடைவெளி அறிக்கை 2022

November 11 , 2022 746 days 420 0
  • "ஏற்றல் இடைவெளி அறிக்கை 2022: மிகவும் சிறியது, மிக மெதுவான- பருவநிலை ஏற்பு நிலையில் உள்ள வீழ்ச்சி உலகை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது  வெளியிட்டு உள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் வெளியிடப்படுகிறது.
  • ஏற்பு குறித்தத் திட்டமிடல், நிதியளித்தல் மற்றும் அமலாக்கம் ஆகியவற்றில் பதிவான உலகளாவிய முன்னேற்றத்தின் அறிவியல் அடிப்படையிலான மதிப்பீட்டை இது வழங்குகிறது.
  • தகவமைப்பு சார்ந்தத் திட்டமிடல், நிதியுதவி மற்றும் அமலாக்கம் ஆகியவற்றில் உலக நாடுகள் தற்போது மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் வளர்ந்து வரும் பருவ நிலை தொடர்பான அபாயங்களை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.
  • உலக நாடுகள் தற்போது சராசரி உலக வெப்பநிலையில் 2.8 டிகிரி செல்சியஸ் உயர்வு என்ற பாதையில் பயணித்து வருகின்றன.
  • ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் 2 ° C க்கு மேல் இருந்தால், அது பேரழிவு மிக்க பருவநிலை நெருக்கடியை ஏற்படுத்தும்.
  • UNFCCC கட்டமைப்பில் உள்ள குறைந்தபட்சம் 84% நாடுகள் ஏற்பு திட்டங்கள், உத்திகள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுத்துள்ளன.
  • இது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 5% அதிகமாகும்.
  • UNFCCC கட்டமைப்பில் உள்ள 197 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் பருவநிலை சார்ந்த ஏற்பில் கவனம் செலுத்தும் அளவு மற்றும் காலக்கெடுவுக்கான இலக்குகளைக் கொண்டுள்ளது.
  • ஏற்பு சார்ந்த தேவைகளின் செலவினமானது 2030 ஆம் ஆண்டிற்குள் 160-340 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2050 ஆம் ஆண்டிற்குள் 315-565 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்