ஏழாவது பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு – தமிழ்நாடு
October 10 , 2019 1929 days 790 0
தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் 7வது பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தார்.
பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பானது மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடு மற்றும் கட்டமைப்பு பொருளாதார அம்சங்கள் குறித்தத் தகவல்களை வழங்குகின்றது.
இது பொருளாதார நடவடிக்கைகளின் புவியியல் பரவல் / நிறுவனக் குழுக்கள், நிறுவனத்தின் உரிமை முறை மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் போன்ற மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றது.
2013 ஆம் ஆண்டின் பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் 50.29 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பைப் போலன்றி, இந்த முறை பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பானது ஒரு செயலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்.
32,000க்கும் மேற்பட்ட கணக்கீட்டாளர்கள் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட இருக்கின்றார்கள்.