TNPSC Thervupettagam

ஏழு இடங்களில் அகழாய்வு – தமிழ்நாடு

February 1 , 2022 903 days 953 0
  • தமிழகம் முழுவதும் உள்ள தொல்பொருள் தளங்களில் மாநில அரசு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டு ஏழு இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது.
  • அவையாவன : சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் (கொந்தகை, அகரம், மணலூர்) (கட்டம் – VIII), தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை (கட்டம் – III), அரியலூர் மாவட்டத்திலுள் கங்கை கொண்ட சோழபுரம் (கட்டம் – III), கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை (கட்டம் – II), விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துலுக்கார் பட்டி மற்றும் தருமபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலை (கட்டம் – I) ஆகியன.
  • மேலும் தொல்லியல் துறையானது, இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசியக் கடல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொற்கைக் கடற்கரையில் ஒரு முன்னீட்டாய்வினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
  • இந்த ஆய்வானது, தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தின் அருகே மேற் கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்