ஏஸ்வேர் பின்டெக் சர்வீசஸ் (fintech services company) எனப்படும் நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஏஸ் மணி நியோ வங்கி (Ace Money Neobank) எனப்படும் கேரளாவின் முதல் நியோ வங்கியை தொடங்கியுள்ளது.
இதற்காக அந்நிறுவனம் YES வங்கி மற்றும் ICICI வங்கியுடன் இணைந்திருக்கின்றது.
ஏஸ்வேர் என்பது கேரளாவினை மையமாகக் கொண்ட எனப்படும் ஒரு நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஆகும்
ஏஸ் மணி வங்கியின் சேவைகள் கேரளாவின் அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப் படும்.
நியோ வங்கிகள்
இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் வழக்கமான வங்கிகளை போல் அல்லாது முழுவதுமாக இணையவழியில் செயல்படும் ஒரு வகையான டிஜிட்டல் வங்கியாகும்.
Chqbook (Chqbook.com) என்பது மளிகைக் கடைகள், வணிகர்கள், வேதியியலாளர்கள் மற்றும் மற்ற உரிமையாளர்கள் போன்ற சிறிய வணிக உரிமையாளர்களுக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
Fampay என்பது பதின்ம வயதினருக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
Finin என்பது நுகர்வோருக்காக முழு அளவில் இயங்கும் இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.