TNPSC Thervupettagam
December 9 , 2023 353 days 203 0
  • இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐஎன்எஸ் இம்பால் கப்பலின் (12706) அடையாளச் சின்னத்தைத் திறந்து வைத்தார்.
  • இது நான்கு புலப்படா வழிகாட்டும் ஏவுகணை அழிப்பான் கப்பல் கட்டும் 15பி என்ற திட்டத்தின் மூன்றாவது கப்பலாகும்.
  • இந்தச் சின்னம் அதன் இடதுபுறத்தில் காங்லா அரண்மனை மற்றும் வலதுபுறத்தில் 'கங்லா-சா' ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • கங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் தொல்பொருள் தளமாகவும் கடந்த காலத்தில் அரசரின் தலைமை இடமாகவும் இருந்தது.
  • ‘கங்லா-சா’ என்பது மணிப்பூர் வரலாற்றில் இருந்து வந்த ஒரு புராண உயிரினம் ஆகும், என்பதோடு அதன் மக்களின் பாதுகாவலர் எனும் அடையாளமாகவும் அது உள்ளது.
  • ‘கங்லா-சா’ மணிப்பூரின் மாநிலச் சின்னமாகவும் உள்ளது.
  • இது இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப் பட்டு, மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) மூலம் கட்டப்பட்டது.
  • இந்தக் கப்பல் உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் ஒரு அடையாளமாகும் என்பதோடு இது உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப் பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்