இது விசாகப் பட்டினத்தில் இருக்கும் இந்தியக் கடற்படையின் கப்பல் கட்டும்தளத்தில் இருந்து இந்தியக் கடற்படைக்கு அனுப்பப் படவுள்ள ஒரு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் ஆகும்.
இது கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (Garden Reach Shipbuilders & Engineers) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும்.
இந்தியக் கடற்படையின் கமோர்டா-வகுப்பு போர்க் கப்பல்களின்திட்டம் அல்லது ‘திட்டம் 28’ (Project 28’ or Kamorta-class corvettes) என்ற திட்டத்தின் உள்நாட்டில் கட்டப்பட்ட நான்கு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களுள் இது கடைசியாகும்.
இந்த திட்டத்தின் கீழ் உள்ள மற்ற மூன்று போர்க் கப்பல்கள் ஐ.என்.எஸ் கமோர்டா (2014), ஐ.என்.எஸ் காட்மட் (2016) மற்றும் ஐ.என்.எஸ் கில்டன் (2017) ஆகியவை ஆகும்.