உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட இரண்டு இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல்கள் சமீபத்தில் படையில் இணைக்கப்பட்டன.
அவை, திட்டம் 15 பி அழிப்புக் கப்பலான இந்திய கடற்படைக் கப்பல் (INS) சூரத் மற்றும் திட்டம் 17 ஏ போர்க் கப்பலான இந்தியக்கடற்படைக் கப்பல் உதயகிரி ஆகியனவாகும்.
திட்டம் 15 பி அழிப்புக் கப்பல்களின் வரிசையில் ‘சூரத்’ நான்காவது கப்பலாகும்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைத் தொடரின் நினைவாக பெயரிடப்பட்ட ‘உதயகிரி’ திட்டம் 17 ஏ போர்க் கப்பல்களின் வரிசையில் மூன்றாவது கப்பலாகும்.
இவை மேம்படுத்தப்பட்ட ரேடாருக்குப் புலப்படாத அம்சங்கள், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உணர்விகள் மற்றும் இயங்குதள மேலாண்மை அமைப்புகளுடன் கூடிய P17 ரக போர் விமானங்களை (ஷிவாலிக் வகுப்பு ) வரிசையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.