TNPSC Thervupettagam
December 22 , 2022 578 days 321 0
  • இது 2022 ஆம் ஆண்டு கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது இந்தியக் கடற்படையின் விசாகப்பட்டின ரகம் சார்ந்த, ரேடாருக்குப் புலப்படாத வகையிலான தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்பு கப்பல்களின் இரண்டாவது தொடர் ரகமாகும்.
  • இது 15B திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இது மும்பையில் அமைந்துள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் (MDSL) கட்டமைக்கப் பட்டது.
  • இந்தக் கப்பலின் 75 சதவிகிதக் கட்டுமான அம்சங்கள் ஆனது உள்நாட்டுக் கருவிகளால் கட்டமைக்கப் பட்டதாகும்.
  • இந்தியக் கடற்படையின் 15B என்ற திட்டத்தின் நோக்கமானது, அதிகபட்ச உள்நாட்டு உள்ளீடுகளைக் கொண்ட, ரேடாருக்குப் புலப்படாத வகையிலான தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்புக் கப்பல்களை உருவாக்குவதாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட முதல் கப்பலான ஐஎன்எஸ் விசாகப் பட்டினம் ஆனது இது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டது.
  • இந்தியக் கடற்படையின் விசாகப்பட்டினம் ரகம் சார்ந்த ரேடாருக்குப் புலப்படாத வகையிலான தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்புக் கப்பல்களின் தொடர் ரகங்களில் முதன்மையான கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்