TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசு இந்தியா இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்

December 27 , 2020 1354 days 529 0
  • நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றமானது வரி சார்ந்த பிரச்சினையில் இந்தியாவிற்கு எதிரான ஐக்கியப் பேரரசின் கெய்ர்ன் ஆற்றல் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனமானது தனது கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில்  உள்ள தனது பங்கை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்திய வரித்துறையானது ரூ.10,247 கோடியை அதனிடம் வரியாகக் கோரியது.
  • இந்திய அரசானது 2012 ஆம் ஆண்டில் உள்நாட்டு வணிக மறுசீரமைப்பின் மீது பின்னோக்கித் தேதியிட்ட வகையில் கடந்த காலத்திற்கும் பொருந்தக் கூடிய வரிச் சட்டத்தைப் பயன்படுத்தி வரியைக் கோரியது.
  • இதற்கு முன்பு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வோடபோன் நிறுவனமானது இந்திய அரசிறகு எதிராக ஒரு சர்வதேச நடுவர் வழக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்