TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் உயரிய விருது

May 23 , 2019 1894 days 693 0
  • ஐ.நா.வின் உயரிய அமைதிக் காப்பு விருதான “தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருது” மறைந்த மலாவிய வீரரான ஜான்சி சிட்டிடி என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • காங்கோவில் எபோலா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் நடவடிக்கையின் போது ஒரு கும்பலிடமிருந்து தனது சக வீரரைக் காப்பாற்றி, அந்த கும்பலுக்கு எதிராகப் போரிட்ட போது இவர் உயிரிழந்தார்.
விருது பற்றி
  • தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருதானது ஐ.நா.வினால் 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • ருவாண்டாவிற்கான ஐ.நா. திட்டம் என்ற முன்னாள் திட்டத்தில் (UN Mission in Rwanda - UNAMIR) கேப்டன் பேய் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப் படுகொலையின் போது ஆயிரக்கணக்கான ருவாண்டா மக்களை அவர் காப்பாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்