TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காலநிலை நடவடிக்கை விருதுகள் 2019

November 29 , 2019 1704 days 545 0
  • இந்த விருதை மஹிலா ஹவுசிங் சேவா டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமையிலான ஒரு திட்டம் வென்றுள்ளது.
  • காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மீதான பின்னடைவை அதிகரிப்பதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்களை ஒழுங்கமைத்து, அதிகாரம் அளித்ததற்காக இந்தத் தொண்டு நிறுவனம் பாராட்டப் பட்டது.
  • இது இதுவரை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள ஏழு நகரங்களில் ரூ 25,000க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளது.
  • டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்பெயினில் மாட்ரிட்டில் சிலி அரசு நடத்தவிருக்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 25) இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.
  • COP25 மாநாடானது டிசம்பர் மாதம் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்