TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையம்

March 20 , 2020 1619 days 602 0
  • சியரா லியோன் நாடு முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ளது.
  • சியரா லியோனின் பொதுப் புள்ளிவிவர ஆணையரான ஒஸ்மான் சங்கோ என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவர ஆணைய அமர்வுகளின் அறிக்கைகளை வெளியிடும் உறுப்பினராக 4 ஆண்டுக் காலத்திற்கு (2020-2023) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று நியூயார்க்கில் முடிவடைந்த 51 வது அமர்வில், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (Sustainable Development Goals - SDG) உலகளாவிய குறிகாட்டிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட முப்பத்தாறு மாற்றங்கள் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையத்தால் (United Nations Statistical Commission - UNSC) ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • திருத்தப்பட்ட உலகளாவியக் கட்டமைப்பானது 231 குறிகாட்டிகளைக் கொண்டிருக்கும். அசல் கட்டமைப்பானது ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலான குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது.
  • இந்த மாற்றங்கள் SDG குறிகாட்டிகள் மீதான ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்கிடையேயான நிறுவனம் மற்றும் நிபுணர் குழுவால் (UN Inter-Agency and Expert Group on SDG Indicators - IAEG-SDGs) நடத்தப்பட்ட ‘2020 விரிவான ஆய்வின்’ அடிப்படையில் அமைந்தவையாகும்.
முக்கியமான மாற்றங்கள்
  • 2, 3, 4, 10, 13 மற்றும் 16 ஆகிய ஆறு SDG இலக்குகளில் எட்டு கூடுதல் குறிகாட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளன.
  • 1, 4, 8, 11, 13 மற்றும் 17 ஆகிய ஆறு SDG இலக்குகளில் உள்ள ஆறு குறிகாட்டிகள் நீக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்