கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA - UN General Assembly) வருடாந்திரக் கூட்டத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பயணம் செய்ய மாட்டார்கள்.
இந்த ஆண்டில் (2020) UNGA ஆனது ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டதின் 75 ஆண்டை அனுசரிக்கின்றது.
UNGAன் தலைவர் நைஜீரியாவைச் சேர்ந்த டிஜானி முகம்மது பாண்டே ஆவார்.
UNGAன் தலைவர் பதவியானது வருடாந்திர அடிப்படையில் UNGAல் இருக்கும் பிரதிநிதிகளால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
இந்தச் சபையின் அமர்வானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் தொடங்குமாறு பட்டியலிடப் படுகின்றது.