ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சிலியின் இரண்டு முறை அதிபராக இருந்த மிச்செல்லே பச்செல்லட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளார்.
இவர் ஜோர்டான் தூதரான ஜெய்த் ராஅத் அல் ஹுசைன் என்பவருக்குப் பதில் பதவி ஏற்பார்.
சிலியின் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவராவார்.
அவரின் முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு உலகளவில் பாலின சமத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் முதல் இயக்குநராக 2010-ல் பணியாற்றினார்.