ரஷ்ய மொழி தினம் என்பது முதல்முறையாக 2010 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் கொண்டாடப் பட்டது.
இது கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் பன்மொழித் தன்மையை ஆதரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஜூன் மாதம் 6 ஆம் தேதியானது 1799 ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்த அலெக்சாண்டர் புஷ்கின் என்பவரின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.
அனைத்து ஐரோப்பிய இலக்கிய வகைகளுக்கும் ரஷ்யாவை அறிமுகப்படுத்திய மிகப் பெரிய ரஷ்யக் கவிஞராக புஷ்கின் கருதப் படுகிறார்.
ஐநா அமைப்பு பிரெஞ்சு, ஸ்பானியம், ஆங்கிலம், அரபு, சீனம் மற்றும் ரஷ்ய மொழி ஆகிய ஆறு அதிகாரப் பூர்வமொழிகளின் சமத்துவத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது.