ஐக்கிய நாடுகளின் “குழந்தை இறந்து பிறத்தல்” அறிக்கை
October 15 , 2020 1502 days 681 0
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் “ஒரு புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு : குழந்தைஇறந்து பிறத்தலின் உலகளாவிய சுமை” என்பது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையானது யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தை இறந்து பிறத்தல் (குறைப் பிரசவம்) என்பது 28 வார கால பிரசவத்தில் உயிர் வாழ்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இறந்து பிறக்கும் ஒரு குழந்தையைக் குறிக்கின்றது.
குழந்தை இறந்து பிறக்கும் ஒரு நிகழ்வானது ஒவ்வொரு 16 வினாடிகளுக்கும் ஒருமுறை நடக்கின்றது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த நிகழ்வுகளில் 84% குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றது.
ஐக்கிய நாடுகளில் குழந்தை இறந்து பிறத்தல் குறித்த அறிக்கை வெளியிடப் படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவின் நிலை
உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ள 19 மில்லியன் குழந்தை இறந்து பிறத்தலில், இந்தியாவின் பங்கு 0.34 மில்லியன் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
இந்தியா மற்றும் நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உலகில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தை இறந்து பிறத்தலைப் பதிவு செய்துள்ளன அல்லது அதற்குக் காரணமாக உள்ளன.
இந்தியாவில் குழந்தை இறந்து பிறத்தல் நிகழ்வின் குறைப்பானது கடந்த 20 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
குழந்தை இறந்து பிறத்தல் விகிதமானது 2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2010ல் 2.7% என்ற அளவில் மேம்பட்டு இருக்கின்றது.