TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் ஆங்கில மொழி தினம் – ஏப்ரல் 23

April 25 , 2020 1678 days 502 0
  • வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு மற்றும் இறப்பு தினமாக ஏப்ரல் 23 என்ற தேதியானது பாரம்பரியமாக அனுசரிக்கப் படுவதன் காரணமாக இத்தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 
  • இது 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல் துறையினால் ஏற்படுத்தப் பட்டது.
  • சீன மொழியான மாண்டரின் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றிற்கு அடுத்து உலகின் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி ஆங்கிலம் ஆகும்.
  • ஐக்கிய நாடுகள் ஸ்பானிஷ் மொழி தினமானதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் ஏற்படுத்தப் பட்டது. 
  • இது பன்மொழித்துவம் மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை அனுசரிப்பதற்காகவும் இந்த அமைப்பு முழுவதும் 6 அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
  • மொழிகளுக்கான ஐக்கிய நாடுகள் தினங்கள் பின்வருமாறு
    • அரபி (டிசம்பர் 18)
    • சீன மொழி (ஏப்ரல் 20)
    • ஆங்கிலம் (ஏப்ரல் 23)
    • பிரெஞ்சு மொழி (மார்ச் 20)
    • ரஷ்ய மொழி (ஜுன் 06)
    • ஸ்பானிஷ் மொழி (ஏப்ரல் 23)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்