ஐக்கிய நாடுகள் உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகல்
February 8 , 2025 15 days 64 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டைத் துண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையான UNRWA மீதான நிதித் தடையை நீட்டிப்பதற்கு அமெரிக்க அதிபர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அவ்வறிவிப்பையடுத்து இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைவதாக அறிவித்துள்ளது
டிரம்ப் ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் 2015 பாரிசு பருவநிலை உடன்படிக்கை ஆகியவற்றிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டுள்ளார்.
டிரம்ப் ஆட்சியானது, முன்னதாக 2018 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்காவினை விலகச் செய்தது.